பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவர் சுப்பிரமணியசாமி. அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்துபவர். பிரதமர் மோடி கறுப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக சமீபத்தில் அறிவித்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற நடவடிக்கையில் மத்திய நிதியமைச்சகத்தின் செயல்பாடுகளை “மோசமான திட்டமிடல்” என்று கடுமையாக விமர்ச்சித்திருக்கிறார்
நிதியமைச்சகத்தின் மோசமான திட்டமிடலால் ஏற்பட்டுள்ள பின்விளைவுகளைக் கண்டு தாம் அதிர்ச்சியடைந்திருப்பதாகவும், நிதியமைச்சகம் இதற்கு எந்த சாக்குப்போக்கையும் சொல்லி தப்ப இயலாது என்று அவர் ஹாங்காங்கில் ஊழல் ஒழிப்பு குறித்த கருத்தரங்கு ஒன்றில் பேசும்போது தெரிவித்திருக்கிறார்.
மேலும், மக்கள் அதிலும் முக்கியமாக வயதானவர்கள் அவதிப்படாதபடி தற்காலிக பணம் மாற்றும் இயந்திரங்களை ஏற்பாடு செய்திருக்க வேண்டும் என்றும் அவர் குறிபிட்டுள்ளார்.
மக்கள் பணத்தை மாற்றமுடியாமல் அவதிப்பட்டுவரும் வேளையில் ஏடிஎம்கள் சரிவர இயங்கி சகஜநிலை திரும்ப இன்னும் 21 நாட்கள் ஆகலாம் என்று கணக்கிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இன்னும் 50 நாட்கள் சிரமங்களை பொறுத்துக்கொள்ளும்படி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்