டெல்லி: சர்ச்சைக்குரிய கருத்துக்களையும், விமர்சனங்களையும் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி சீனா சென்றார்.
கடந்த சில நாட்களாக ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களையும், விமர்சனங்களையும் தெரிவித்து வந்த பா.ஜ.க. எம்.பி. சுப்ரமணியன் சுவாமி பத்து நாள் பயணமாக சீனாவுக்கு நேற்று புறப்பட்டார்.
சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ‘பியூபில்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் பாரீன் அபயர்ஸ்’ விடுத்த அழைப்பின் பெயரில் சீனாவுக்கு செல்வதாக அவர் தெரிவித்தார்.
மேலும், பெய்ஜிங்கில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றிலும் சுவாமி உரையாற்றுகிறார். இந்த பயணத்தின் போது சீனாவின் மூத்த அரசியல் தலைவர்களையும் சந்தித்து இந்தியா-சீனா இடையேயான தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை நடத்துகிறார். முன்னதாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சந்தித்து பேசினார்.