நியூஸ்பாண்ட்:
கடந்த ஒருவாரமாக நிலவி வந்த குழப்பங்கள் நீங்கி, புதுவை முதல்வராக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் “ஒருமனதாக” தேர்ந்தெடுக்கப்பட்டருக்கிறார் நாராயணசாமி.
இது குறித்து புதுவை அரசியல் வட்டாரத்தில் விசாரித்த போது கிடைத்த  தகவல்கள் படு சுவாரஸ்யமானவை.
“தனக்கு முதல்வர் பதவியை அளிக்க வேண்டும் என்று டில்லி காங்கிரஸ் மேலிடத்தில் நாராயணசாமி கேட்டபோதே, “நீங்கள் எம்.எல்.ஏவாக இல்லை.  உங்களை முதல்வர் ஆக்கினால் ஆறு மாதங்களில் எம்.எல்.ஏ. ஆக வேண்டும். உங்களுக்காக நமது கட்சியில் எந்த எம்.எல்.ஏ. ராஜினாமா செய்து தொகுதியை விட்டுக்கொடுப்பார்” என்று மேலிடத்தில் கேட்டிருக்கிறார்கள்.
download
இதையடுத்து டில்லியில் இருந்து பறந்தோடி புதுவை வந்த நாராயணசாமி,  காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் பலரிடம் தனது எண்ணத்தை மறைமுகமாக பேச ஆரம்பித்திருக்கிறார்.
ஆனால் ஒருவர்கூட, எம்.எல்.ஏ. பதவியை விட்டுத்தர தயாராக இல்லை.
ஆனாலும் சற்றும் மனம் தளராத நாராயணசாமி, தி.மு.க. மேலிடத்தை அணுகியிருக்கிறார்.
“எனக்கு முதல்வர் பதவி அளிக்க எங்கள் கட்சி மேலிடம் தயாராக இருக்கிறது. ஆனால் எங்கள் கட்சி எம்.எல்.ஏக்கள் 15 பேரில் ஒருவர்கூட எனக்காக ராஜினாமா செய்ய தயாராக இல்லை. உங்கள் கட்சி சார்பாக இருவர் எம்.எல்.ஏக்களாக இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரை எனக்காக ராஜினாமா செய்யச் சொல்ல வேண்டும்” என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு தி.மு.க. மேலிடமும் ஒப்புக்கொண்டது” என்கிறார்கள் புதுவை வட்டாரத்தில்.
“தி.மு.க.ஏன் இதற்கு ஒப்புக்கொள்ள வேண்டும்” என்று கேட்டால், “கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது நாராயணசாமி, மத்திய இணை அமைச்சராக இருந்தார் அல்லவா.. அப்போது, 2ஜி விவகாரங்களில் தி.மு.க. தரப்புக்கு நிறையவே உதவியிருக்கிறார் நாராயணசாமி. அதற்கு  கைமாறாகத்தான் இந்த பதில் உதவி” என்கிறார்கள்.
சரி… புதுவை சட்டமன்றத்தில் தி.மு.க.வுக்கு இரண்டு எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். அவர்களில் யார் ராஜினாமா செய்யப்போவது என்றுகேட்டால்…
“காரைக்கால்  நிரவி திருபட்டினம் தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வென்ற கீதா ஆனந்தன்தான் தனது பதவியை நராயணசாமிக்காக ராஜினாமா செய்யப்போகிறார்” என்கிறார்கள்.