சென்னை: அனுமதியற்ற மனைப்பிரிவுகளை கண்டறிந்து வரும் 28 ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும்படி, அதிகாரிகளுக்கு தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது.
தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அரசாணைப்படி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், www.tnlayoutreg.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பம் செய்து முறைப்படுத்தி கொள்ளுமாறு ஏற்கனவே அறிவிக்கப்ப ட்டிருந்தது. .இத்திட்டத்தின் முக்கிய அம்சமாக அனுமதியற்ற மனைப்பிரிவு மற்றும் மனைகள், 2016, அக்., 20ம் தேதிக்கு முன் பத்திரப்பதிவு செய்தவர்கள், தங்களது மனைகளை முறைப்படுத்திக்கொள்ள நகர் ஊரமைப்பு துறையின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையர்கள் தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனுமதியற்ற மனைப்பிரிவுகளை கண்டறிந்து வரும் 28 ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவுபிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இதற்கான உத்தரவை நகராட்சி நிர்வாக ஆணையகரகம் வெளியிட்டு உள்ளது.