தனது மகள் சுபஸ்ரீயின் மறைவுக்கு ரூ. 1 கோடியை இழப்பீடாக தமிழக அரசு வழங்க உத்தரவிடக்கோரி, அவரது தந்தை ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் செப்.12 ஆம் தேதி சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்த ஐடி பெண் ஊழியர் சுபஸ்ரீ சாலையில் வைக்கப்பட்ட பேனர் சரிந்து லாரி மோதி பலியான சம்பவத்தில் தமிழக அரசிடம் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு சுபஸ்ரீயின் தந்தை ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அந்த மனுவில் தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனவும், இந்த வழக்கில் சிறப்பு விசாரணை குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ள அவர், பேனர் வைப்பதை தடுக்க பல்வேறு கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கானது விடுமுறைக்கான சிறப்பு அமர்வு நாளை விசாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது