இதற்கு பதில் சொல்ல முடியுமா சுபவீ?: கவுண்ட்டர் பகிரங்க கடிதம்

எஸ்.வி.சேகருக்கு சுப.வீ எழுதியிருக்கும் பகிரங்க கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் சுப.வீ.க்கு ஒரு பகிரங்க கடிதம் என்று ஒரு கடிதம் உலா வர ஆரம்பித்திருக்கிறது.

அந்த கடிதம்:

ஐயா சுபவீ,

முதலில் நீங்கள் பேசி தெளிவு பெறவேண்டியது ஸ்டாலினிடம் தான்.

1.  எஸ்.வீ.சேகர் சொல்லி உங்கள் செயல் தலைவர் ஸ்டாலின் அதற்கு பணிந்திருந்தால் அது தவறுதானே..  அப்படியானால் மு.க. ஸ்டாலினை எதிர்க்க நீங்கள் தயாரா?

2.  எஸ்.வீ.சேகர் ஸ்டாலினிடம் அப்படி சொல்லவே இல்லை என்றால், பொய் பேசி ஸ்டாலினை களங்கப்படுத்துவதற்காக சேகர் மீது  வழக்கு தொடுக்க வேண்டும்.

3.  இது இரண்டுமில்லாமல் ஸ்டாலினுக்கு முட்டுக்கொடுத்து ஏதோ ஸ்டாலினை எஸ்.வீ.சேகர் எதிர்ப்பதாக பொய் பிம்பத்தை ஏன் ஏற்படுத்துகிறீர்கள்?

#   இந்த கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்ல முடியுமா?

–   தங்கள் உண்மையுள்ள,

காசிமுத்து ராஜன்

இப்படி ஓர் கடிதம் சமூகவலைதளங்களில் உலவுகிறது.


English Summary
Subavee, Can you answer this ?: counter open letter