சென்னை:

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள  பேனர் விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீ விவகாரம் சமூக வலைதளங்களில் டிரென்டிங்காகி உள்ளது.

இந்த நிலையில், அவர் பணிபுரிந்த அலுவலகத்தில், அவரது பணியாற்றி வந்த இடத்தில், அவரது நண்பர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் ரோஜா மலர் செலுத்தி தங்களது அஞ்சலியை செலுத்தினர்.

சென்னை பள்ளிக்கரனை அருகே அதிமுகவினரின் பேனர் காரணமாக இளம்பெண் சுபஸ்ரீ  மரணம் அடைந்துள்ளார். பேனர் வைப்பதற்குச் சென்னை மாநகராட்சி கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், அதையும் மீறி  அதிமுகவினர் வைத்த வைத்த பேனர் விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில், தொழில்நுட்ப நிறுவனத்தின் பணியாற்றி வந்த  23 வயது இளம்பெண் அநிநாயமாக பலியானார். இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது.

சுபஸ்ரீ மரணத்தைத் தொடர்ந்து, பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள், கட்அவுட்கள் வைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும், சுபஸ்ரீ மரணம் மற்றும் நோ பேனர் ஹேஷ்டேக் டிரெண்டிங் காகி வருகிறது.  இதையடுத்து, அனைத்து அரசியல் கட்சிகளும், பேனர் வைக்க மாட்டோம் என்று உறுதி அளித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், பேனர் விபத்தில் பலியான சுபஸ்ரீ பணியாற்றி வந்த ஐடி நிறுவனத்தில், அமர் அமர்ந்து பணிபுரியும் கம்ப்யூட்டர் டேபிளில்,  அவரது நண்பர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள், அவரின் ஐடி கார்டு வைத்து ரோஜா மலர் செலுத்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.