முட்டாள் ரஜினி, அரசியலுக்கு ஏன் வரணும்? :  கட்ஜூ காட்டம்

Must read

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் போன்று ரஜினிகாந்த் மண்டையிலும் ஒன்றும் கிடையாது என்று  உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தனது டுவிட்டர் பக்கத்தில் காட்டமாக பதிவிட்டுள்ளார்.

சென்னையில் கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினிகந்த் கடந்த சில தினங்களாக ரசிகர்களை சந்தித்தார். அவரது பேச்சு, வழக்கம்போல அவரது அரசியல் பிரவேசம் பற்றிய விவாத்ததைக் கிளப்பியது.

மேலும், “ரஜினி தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்றும் ஏராளமானோர் விரும்புவதால் அவர் 7 கோடி தமிழர்களை ஏமாற்ற மாட்டார் என்று அவரது நண்பர் ராஜ பகதூர் கருத்துத் தெரிவித்தார்.

இந்த நிலையில், ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தனது டுவிட்டர் பக்கத்தில், ” தென்னிந்தியர்கள் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். ஆனால், தமிழ் சினிமா நட்சத்திரங்கள் மீது அவர்கள் வைத்துள்ள முட்டாள்தனமான பக்தியை என்னால் எப்போதுமே புரிந்துகொள்ள முடியவில்லை.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்தபோது , ஒருசமயம் எனது தமிழ் நண்பர்களுடன் சேர்ந்து ‘சிவாஜி கணேசன்’ நடித்த படம் ஒன்றை பார்க்கச் சென்றேன். அப்போது, படத்தின் துவக்கத்தில் சிவாஜியின் காலை மட்டும் திரையில் காட்டியபோது, ரசிகர்கள் விசில் அடித்து ஆரவாரம் செய்தனர்.

இப்போதும், ஏராளமான தென்னிந்தியர்கள் ரஜினிகாந்த் மீது பைத்தியமாக உள்ளனர். அவர் அரசியலுக்கு வந்து முதலமைச்சர் ஆக வேண்டும் என்றுகூட சிலர் கூறுகிறார்கள்.

ஆனால் ரஜினியிடம் என்ன இருக்கிறது? வறுமை, வேலையின்மை, ஊட்டச்சத்து குறைபாடு, சுகாதார குறைபாடு, விவசாயிகளின் துயரம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வுகள் வைத்துள்ளாரா அவர். அவரிடம் ஒன்றும் இல்லை என்று நினைக்கிறேன். பிறகு ஏன் அவர் அரசியலுக்கு வரவேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்? அமிதாப் பச்சன் போன்று ரஜினிகாந்த் தலையிலும் எதுவும் இல்லை.” என்று கட்ஜு  காட்டமாக பதிவிட்டுள்ளார்.
 

More articles

Latest article