
அஜய் ராவ் மற்றும் ரசிதா ராம் நடிப்பில் உருவாகிவரும் கன்னட படம் ‘லவ் யூ ராச்சு’ . கர்நாடகா ஜோகேனஹள்ளியில் படப்பிடிப்பை நடத்தி வருகிறது படக்குழு .
சண்டைக் காட்சியை படமாக்கிக் கொண்டிருந்த போது ஸ்டண்ட் குழுவின் ஒரு பகுதியாக இருந்து உதவி விவேக் அங்கிருந்த மின் கம்பியை மிதித்து, மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். இதில் 2 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதை அடுத்து தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் விசாரணைக்காக ஸ்டண்ட் மாஸ்டர் வினோத்தை காவலில் அழைத்துச் சென்றதுடன், படக்குழுவினரின் அலட்சியம் தான் இந்த விபத்துக்கு காரணம் என்றும், ‘லவ் யூ ராச்சு’ படக்குழுவினர் ஷூட்டிங்கிற்கு அனுமதி பெறவில்லை என்றும் பிடாடி போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.