சென்னை: கொரோனா பொதுமுடக்கம் காரணமாக நிறுத்தப்பட்ட ரயில்சேவைகள் மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தொடங்கப்பட்டுள்ள நிலையில், வரும் 15ந்தேதி முதல் வரும் 15ம் தேதி மாணாக்கர்கள் புறநகர் ரயில்களின் மாணவர்கள் பயணிக்க அனுமதி வழங்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

கொரோனா பொதுமுடக்கம் காரணமா கடந்த ஆண்டு (2020) மார்ச் மாத இறுதியில் நிறுத்தப்பட்ட ரயில்சேவைகள் மீண்டும் படிப்படியாக தொடங்கப்பட்டு வருகிறது. சிறப்பு ரயில்கள் என்ற பெயரில் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், புறநகர் ரயில் சேவைகளும், கொரோனா நெறிமுறைகள் மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன், அரசு ஊழியர்களுக்கும் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வந்தது.  இதுவரை முழுமையாக பொதுமக்கள் பயணிக்க அனுமதி வழங்கப்படவில்லை.

இதற்கிடையில் கல்லூரிகள், பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், மாணாக்கர்களுக்கும் ரயிலில் பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரப்பட்டு வந்தது. இந்த நிலையில், வரும் 15-ம் தேதி முதல் புறநகர் மின்சார ரயில்களில் மாணவர்கள் பயணிக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

மாணாக்கர்கள் போட்டோவுடன் கூடிய ஐடி கார்டு காண்பிக்க வேண்டும், பாஸ்களுக்கும் அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.