சென்னை:

ன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-1 (11ம் வகுப்பு) தேர்வு முடிவு கடந்த 8ந்தேதி வெளியானது. இந்த நிலையில், தேர்வில் தோல்வியான மாணவ மாணவிகளுக்கு சிறப்பு தேர்வு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்து உள்ளது.

வெளியான நிலையில், தேர்ச்சி பெறாத மாணவ மாணவிகளுக்கு அடுத்த மாதம் (ஜூன்) 14ந்தேதி சிறப்பு தேர்வு நடைபெறும் என்று தமிழக அரசின் தேர்வுத்துறை அறிவித்து உள்ளது.

தேர்வு எழுதிய அரசு பள்ளிகளில் 90.6 சதவிகித பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி அடைந்துள்ளன. இந்த நிலையில் தேர்ச்சி பெறா மாணவ மாணவிகளுக்கு மறுதேர்வு நடத்துவது குறித்து தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் சிறப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. ஜூன் மாதம் 14ந்தேதி சிறப்பு நடைபெறவுள்ள தேர்வுக்கு சிறப்புதேர்வுக்கு நாளை முதல்  விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வெழுத விரும்பும் தனித் தேர்வர்கள் தங்களது மாவட்டத்திற்குரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் நாளையும், நாளை மறுநாளும்  தங்களது விண்ணப்பத்தினை பதிவு செய்யலாம் எனவும் அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள், வயது வரம்பு, கல்வித் தகுதி மற்றும் பாடங்கள் வகைப்பாடு அறிந்து அதன்படி விண்ணப்பிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என்றும், பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.