சென்னை: நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மனஅழுத்தம் இருந்தால், அது தொடர்பாக மாவட்ட மனநல மருத்துவர்களை அணுகலாம் என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த இன்று  சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்கs சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணயின், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்படுகிறது என்றவர்,  தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறார் என்றார்.

நடப்பாண்டு நீட் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது என்றவர்,  நீட் தேர்வு எழுதிய 1,45,988 பேருக்கும் மன நல ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும், நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மன அழுத்தம் ஏற்பட்டால், அவர்கள் உடனே  மாவட்ட மனநல மருத்துவர்களை அணுகலாம் என தெரிவித்தார்.

மேலும், நீட் தேர்வு எழுதிய 564 மாணவர்கள் மன உளைச்சலில் இருப்பது கண்டறியப்பட்டு, 110 மனநல ஆலோசகர்களை கொண்டு தொடர் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. 38 மாவட்டங்களிலும் மாவட்ட கல்வி அலுவலர், மன நல ஆலோசனை குழு மாணவர்களை கண்காணித்து வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.