மும்பை: 14ம் தேதி நடைபெற்ற இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டியின் போது குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் குடிமக்களின் முன்மொழியப்பட்ட தேசிய பதிவுக்கு எதிராக மாணாக்கர் குழு ஒன்று போராட்டங்களை நடத்தியது.
வெள்ளை நிற டி-சர்ட்அணிந்த மாணவர்கள், ‘நோ சி.ஏ.ஏ’, ‘நோ என்.பி.ஆர்’ மற்றும் ‘நோ என்.ஆர்.சி’ என்று எழுதப்பட்ட பதாகைகளை வைத்திருந்தனர்.
எவ்வாறாயினும், வான்கடே ஸ்டேடியத்தில் இந்திய இன்னிங்ஸ் முடிவதற்குள் அவர்கள் வெளியேறினர்.
அவர்கள் சிஏஏக்கு எதிராக மும்பை என்ற குழுவைச் சேர்ந்தவர்கள்.
“மொத்தம் 26 பேர் இருந்தனர், அவர்கள் விஜய் மெர்ச்சண்ட் பெவிலியன் பக்கத்தில் அமர்ந்திருந்தனர். இந்திய விக்கெட்டுகள் ஒரு குவியலாக விழுந்ததால் அவர்களே மைதானத்தை விட்டு வெளியேறினர்” என்று குழுவைச் சேர்ந்த ஃபவாத் அகமது கூறினார்.
ஆர்ப்பாட்டங்களுக்கு இடமளிக்காத வகையில் கறுப்பு ஆடை அணிந்தவர்கள் பாதுகாப்புப் படையினரால் மைதானத்திற்குள் அனுமதிக்கப் படவில்லை என ஊடகங்கள் குரலெழுப்பிக் கொண்டிருந்தபோதும், மும்பை கிரிக்கெட் சங்கத்தின் (எம்.சி.ஏ) மூத்த கவுன்சில் அதிகாரி ஒருவர் இதுபோன்ற உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என்று கூறினார்.
“எந்த நிறத்தைப் பற்றியும் எந்த உத்தரவும் இல்லை, உள்ளூர் போலீசாரின் அறிவுறுத்தலாக எந்த வகையான சுவரொட்டிகளும் அரங்கத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை” என்று எம்.சி.ஏ உறுப்பினர் கூறினார்.
முதல் ஆட்டத்தில், இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் அரைசதம் அடித்தார், ஆஸ்திரேலியா இந்தியாவை 255 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தது.