சென்னை:

மிழகத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுவதாகவும், இனிமேல் அதையே மாணவர்கள் பஸ் பாஸ்க்கு பதில் பயன்படுத்திக் கொள்வது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும், தமிழக சட்டமன்றத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

தமிழக சட்டமன்றத்தில் இன்று கல்வித்துறை தொடர்பான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் செங்கோட்டையன்,  மாணவ மாணவிகளக்கு வழங்கப்படும், பஸ் பாஸ்-க்கு பதில், மாணவர்களுக்கு வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டை காட்டினாலே போதுமானது என்பத குறிதுத  ஆலோசித்து வருகிறோம்; இது அமலுக்கு வந்தால், மாணவர்களுக்கு தனியாக பஸ் பாஸ் தேவைப்படாது  என்று தெரிவித்தார்.

மேலும்,  இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தில் மாற்றம் கொண்டுவருவது குறித்து ஆலோசித்து வருவதாகவும், அரசு பள்ளிகள் இருக்கும் இடத்தில் இருந்து 1 கி.மீ. சுற்றளவிற்குள் உள்ள தனியார் பள்ளிகளில் இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் சேர்க்கைக்கு அனுமதி வழங்குவதில்லை. இதுகுறித்தும் ஆலோசித்து வருவதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

தி.மு.க. உறுப்பினர் சுரேஷ் ராஜன், மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை வரைவு குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த  அமைச்சர் செங்கோட்டையன்,  மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை, மாணவர்களின் அறிவுறுத்திறனை மேம்படுத்துவதாக இருப்பதாக குறிபிட்டார். அதே நேரத்தில் தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழி கொள்கை தான், தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும், மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்றும்  உறுதியளித்தார்.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் நடப்பாண்டில் 81 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும் – பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறினார்.