புதுடெல்லி:
கொரோனா தடுப்பூசி செலுத்தாத மாணவர்களுக்கு வகுப்பறையில் அனுமதி இல்லை என்று சண்டிகர் மாநில அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வரு நிலையில், இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளதுடன், 12 முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளது.

சண்டிகரில் கொரோனா தடுப்பூசி செலுத்தாத 12 முதல் 18 வயது மாணவர்களுக்கு வகுப்பறையில் அனுமதி இல்லை என்று சண்டிகர் மாநில நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சண்டிகரில் கொரோனா தடுப்பூசி செலுத்தாத 12 முதல் 18 வயது மாணவர்களுக்கு வகுப்பறையில் அனுமதி இல்லை என்றும், தடுப்பூசி செலுத்தாத மாணவர்களுக்கு இன்று முதல் நேரடி வகுப்பில் அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.