டெல்லி: இந்தியாவில் ஏப்ரல் மாதம் வரை 661.54 லட்சம் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டு இருப்பதாக மத்தியஅரசு தெரிவித்து உள்ளது.

நாடு முழுவதும் கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், மின்தேவை அதிகரித்துள்ளது. ஆனால், தேவையான மின்உற்பத்தி இல்லாமல் தமிழ்நாடு உள்பட சில மாநிலங்களில் மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதற்கு காரணம், அனல்மின் நிலையங்களில் தேவையான மின்சாரம் தயாரிக்க போதுமானநிலக்கரி இல்லை என்றும், மத்தியஅரசு மாநில அரசுகளுக்கு, தேவையான நிலக்கரியை ஒதுக்க மறுத்து வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. மத்தியஅரசு இதுகுறித்து ஆய்வு செய்து நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், என்ற குற்ற நடப்பாண்டில் ஏப்ரல் மாதம் வரை 661.54 லட்சம் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும்,  கோல் இந்தியா  மற்றும் துணை நிறுவனங்கள் 534.7 லட்சம் டன்களை உற்பத்தி செய்துள்ளன என்று மத்திய நிலக்கரித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 6.02% அதிகம் என்றும்  தெரிவித்துள்ளது.