புனே:
ஆதார் சமர்ப்பிக்காத காரணத்தால் மகாராஷ்டிராவில் 70 மாணவ மாணவிகள் சட்டக்கல்லூரி நுழைவு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஆதாரை கட்டாயமாக்கி வருகிறது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனினும் பல்வேறு திட்டங்களுக்கு அடையாள ஆவணமாக ஆதாரை கேட்டு வலியுறுத்தப்படுகிறது.
இந்த வகையில் மகாராஷ்டிரா மாநில சட்டக்கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வு நேற்று நடந்தது. இதில் அடையாள ஆவணமாக ஆதாரை சமர்ப்பிக்க வலியுறுத்தப்பட்டது.
இந்த வகையில் ஆதார் சமர்ப்பிக்காத மாணவ மாணவிகள் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கோல்காபூரில் 50 பேரும், நாசிக்கில் 20 பேரும், புனேயில் 20 பேரும் தேர்வு எழுத முடியாமல் திரும்பிச் சென்றனர்.