சென்னை: தமிழ்நாட்டில் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள், கலர் பொட்டுகள், ரிப்பன்கள், கயிறுகள் அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது  என  கல்விதுறை உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

பாரம்பரிம் மிக்க தமிழ் சமுதாயத்தில் பெண்கள்  குழந்தைகள் முதல், பெரியோர்கள் வரை பொட்டு வைப்பதும், பூ வைப்பதும், தலையில் ரிப்பன் கட்டுவதும், கழுத்தில் சுவாமி படங்கள் பொரித்த டாலர்கள் அணிவதும் காலம் காலமாக தொன்றுதொட்டு வரும் முறை. இதை தடுக்க திமுக அரசு முனைந்துள்ளது விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. மாணவ மாணவிகளின் தனிப்பட்ட விஷயத்தில் தலையிட அரசுக்கு உரிமை இல்லை என்று  சமூக வலைதளங்களில் பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

மாணவர்கள் அனைவரும் பள்ளியில் ஒன்று போல தான் இருக்க வேண்டும் என்று என்பதற்காக தான் ஏற்கனவே பள்ளி சீருடை வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால் பள்ளி சீருடை கூட பரவாயில்லை, அவர்கள் பொட்டு வைக்க கூடாது, பூ வைக்கக்கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகளும் தற்போது விதிப்பதாக பள்ளி மாணவிகள் குற்றம் சாட்டி இருக்கிறார்கள்.

மாணவ மாணவிகளடையே அதிகரித்து வரும்  போதை பழக்கத்தை தடுக்க முடியாத அரசு, பள்ளி மாணவ மாணவிகளிடையே மத துவேசத்தை  வளர்க்கும் வகையில் தேவையற்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது  என்று விமர்சனம் எழுந்துள்ளது.

ஏற்கனவே கடந்த 2023ம் ஆண்டு இதுபோன்ற ஒரு அறிவிப்பை தனியார் பள்ளி வெளியிட்டது சர்ச்சைக்குள்ளாது. இந்த நிலையில், தற்போது திமுக அரசு தெரிவித்துள்ளது  பெண்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறை,  பள்ளி  செல்லும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய ஒழுக்க நெறிமுறைகளை வகுத்து, தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.   திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்ப தாவது:

மாணவர்கள் அனைவரும் அரசால் தெரிவிக்கப்பட்ட சீருடையையே அணிந்து வர வேண்டும்.

மாணவர்கள் முக்கால் அளவுள்ள மற்றும் இறுக்கமான கால்சட்டையை அணிந்து வரக்கூடாது.

அரைக்கை சட்டை மட்டுமே அணிந்து வரவேண்டும். சட்டை மிகவும் இறுக்கமாக இருக்கக்கூடாது.

கைப்பகுதி முழங்கை அளவுக்கு சற்றுமேல் இருக்குமாறு அமைய வேண்டும்.

தலைமுடியை “ஸ்மார்ட் கட்டிங்” செய்து வரவேண்டும். அதிக முடி வைக்க கூடாது.

கலர் கலரான பொட்டு வைத்து வருவது, வண்ணக்கயிறுகளை கையில் கட்டுவது, கழுத்தில் அணிவது கூடாது.

சாதி அடையாளங்களை குறிக்கும் வகையில் பனியன் அணிந்து வரக்கூடாது,

சைக்கிள்களில் சாதி அடையாளங்களுடன் ஸ்டிக்கர் ஒட்டி வருவதையும் தவிர்க்க வேண்டும்.

மாணவிகள் நிறைய பொட்டு வைப்பதையும், கலர் ரிப்பன் கட்டி வருவதையும் தவிர்க்க வேண்டும்.

நல்ல தூய்மையான காலணிகளை பயன்படுத்த வேண்டும்.

தன் சுத்தம் பேணுமாறு தினமும் வழிபாட்டுக்கூட்டத்தில் கூற வேண்டும்.

மேற்கூறியவற்றை  மாணவர்கள் கடைபிடிக்கிறார்களா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

மாணவர்களின் கல்வி சிறப்பாக இருக்கவும், அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையவும் பெற்றோர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

சென்னை போன்ற நகரங்களில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் மாணவ மாணவிகள் ஒழுக்கேடாகவும், முறையான உடை உடுக்க மறுத்து வருவதுடன், தலைமுடியை முறையாக கட்டிங் செய்யாமலும் இருந்து வருகின்றனர். இவர்களை  ஆசிரியர்கள் கண்டித்தால், அவர்கள் மீதே வன்மம் கக்கும் வகையில்  மாணவ மாணவிகளின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. இந்த நிலையில், கட்டுபாடு என்ற பெயரில் அரசு தேவையற்ற  நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

பூ முடிப்பதும் பொட்டு வைப்பதும் தமிழர்களின் ஒரு முக்கிய பாரம்பரியம். பெண்களின் அடையாளமாக கருதப்படும் இந்த வழக்கம், அவர்களின் அழகு மற்றும் சுபத்தை குறிக்கிறது. பூக்களை தலைமுடியில் அணிவது ஒரு விதமான அலங்காரமாக மட்டுமின்றி, நல்ல அதிர்ஷ்டம் மற்றும் நறுமணத்தை தருவதாகவும் பார்க்கப்படுகிறது. பொட்டு வைப்பதும் பெண்களின் அடையாளமாக, அவர்களின் சுபத்தை வெளிப்படுத்துவதாகவும் உள்ளது.