சென்னை:
தீபாவளிக்குப் பிறகு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நவம்பர் 1ம் தேதி 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் நவம்பர் 4ம் தேதி தீபாவளி பண்டிகை வரவுள்ளதால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்புள்ளதா? என்ற கேள்வி எழுந்து வருகிறது.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நவம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறந்தாலும் மாணவர்கள் கட்டாயம் வகுப்புக்கு வர வேண்டும் என்பதில்லை; தீபாவளிக்குப் பிறகு வர விரும்பும் மாணவர்கள் வரலாம் என்று கூறினார்.