சென்னை: கொரோனா தொற்று காரணமாக, தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மணாவர் சேர்க்கை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் புதிய மாணவர்கள்சேர்க்கை மற்றும், 10ம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் செய்யும் பணி தொடங்கி உள்ளது.
கொரோனா தொற்று காரணமாக, கல்விக்கூடங்கள் மூடப்பட்டு உள்ள நிலையில், 10ம் வகுப்பு தேர்வு உள்பட பல தேர்வுகள் நடத்தப்படாமலேயே தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. அதன்படி, 10-ஆம் வகுப்புத் பொதுத்தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியானது. இதையடுத்து, 10ம் வகுப்பு மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை அந்ததந்த பள்ளிகளின் தலைமையாசிரி யா்கள் பதிவிறக்கம் செய்து அதன் விவரங்களைச் சரிபாா்த்து, சான்றொப்பமிட்டு மாணாக்கர் களுக்கு வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, தற்காலிக சான்றிதழ்கள் வழங்கும்பணி தொடங்கி உள்ளது. இன்று முதல் ஆகஸ்ட் 21-ஆம் தேதி வரை மாணவா்களுக்கு சான்றிதழ்கள் விநியோகம் நடைபெறும் என்றும், சமூக இடை வெளியை பின்பற்றி, உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் பணிகளை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிளஸ்-1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கை வருகிற 24-ந்தேதி ஆரம்பிக்கப்பட உள்ளது
அதுபோல, தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1, 6 மற்றும் 9ஆம் வகுப்புகளுக் கான மாணவர் சேர்க்கை இன்று நடைபெறுகிறது. வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற தமிழக அரசு கூறி உள்ளது.
அதன்படி, அதன்படி 1, 6, 9-ம் வகுப்புகளுக்கான புதிய மாணவர் சேர்க்கையும், ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளிக்கு மாறுவதற்கான பிற வகுப்பு மாணவர் சேர்க்கையும் இன்று தொடங்கி உள்ளது.