சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள விவகாரத்தில்  நீதி கேட்டு போராட்டத்தில் குதித்த பாஜக தலைவர்களான தமிழிசை, வானதி சீனிவாசன் உள்பட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.

வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில்  ஈடுபட்ட அவர்களை காவல்துறையின்ர இழுத்துச் சென்று கைது செய்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் திமுகவை சேர்ந்த நபரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் அதிமுக, பாஜக இன்று தமிழ்நாடு அரசை கண்டித்து போராட்டங்களை அறிவித்தனர். அதன்படி, இன்று அண்ணா பல்கலைக்காகம் முன்பு  போராட்டங்கள்  நடைபெற்று வருகின்றனர்.

அதிமுக தரப்பில், அண்ணா பல்கலைக்கழகத்தின் எதிரே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்,  அவர்கள்,   சாலையில் அமர்ந்து  மறியலில் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் இச்சம்பவத்தை தொடர்ந்து அவர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இதற்கிடையில், மற்றொரு புறம் பாஜகவினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாஜக மாநில முன்னாள் தலைவரும், முன்னாள் கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தலைமையில் ஏராளமான பாஜகவினர் போராட்டத்தில் குதித்தனர். அப்போது திமுக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். சாலையில் அவர்கள் நடத்திய போராட்டத்தை தடுக்க காவல்துறையினர், அவர்களை மேலும் முன்னேறாவாறு தடுப்புகளை கொண்டு நிறுத்தினார். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, அவர்களை காவல்துறையினர் இழுத்துச்சென்று கைது செய்தனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.

வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து வள்ளுவர் கோட்டத்தில் பாஜக-வினர் போராட்டத் தில் ஈடுபட முயன்றனர். பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜக-வினரை, அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்து வாகனங்களில் ஏற்றி அழைத்து சென்றனர்.

முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழிசை சௌந்தரராஜன், நீதி கேட்டு போராட முயன்ற பாஜக-வினரை கைது செய்ய முனைப்பு காட்டும் போலீசார், பாதிக்கப்பட்ட மாணவிக்கு பாதுகாப்பு வழங்காதது ஏன் என கேள்வி எழுப்பினார். பாஜக-வினர் மீதான கைது நடவடிக்கை அராஜகத்தின் உச்சகட்டம் எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

சென்னையில் போராட்டத்திற்கு சென்ற தமிழிசை சௌந்தர ராஜன், உள்ளிட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்தற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : “சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி, திமுக நிர்வாகியால், பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதைக் கண்டித்துப் போராட்டம் நடத்தச் சென்ற, முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர ராஜன், மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன், , மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் சகோதர சகோதரிகளை, வலுக்கட்டாயமாகக் கைது செய்திருக்கிறது காவல்துறை.

குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவன் என்பதால், பாதிக்கப்பட்ட மாணவி குறித்த விவரங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கையை வெளியே கசிய விட்டிருக்கிறார்கள். ஒரு பாலியல் வழக்கில், பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படைக் கடமையிலிருந்து தவறியிருக்கிறது திமுக. இது தனிமனித உரிமைகளுக்கு எதிரானது மட்டுமின்றி, சட்டவிரோதச் செயல்பாடும் ஆகும்.

இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின்முழு பொறுப்பு. திமுகவைச் சேர்ந்த பாலியல் குற்றவாளியைப் பாதுகாக்க, இத்தனை கீழ்த்தரமான, மனசாட்சியற்ற செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் திமுக அரசையும், காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் ஸ்டாலினையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாகத் தமிழகத்தை மாற்றியிருப்பதற்கு வெட்கப்படுங்கள் ஸ்டாலின் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.