சென்னை: பரங்கிமலை ரயில் நிலையத்தில், சக மாணவனால்,  ரயில் முன் தள்ளி விட்டு கொலையான கல்லூரி மாணவி சத்யா வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். காவல்துறையினரின் கட்டப்பஞ்சாயத்தால்தான் இந்த விவகாரம் கொலை வரைக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில்  நேற்று முதினம் மதியவேளையில், கல்லூரி மாணவி சத்யாவை அவரது நண்பரான,  சதீஷ் என்பவரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டார். பின் தப்பியோடிய கொலையாளி கைது செய்யப்பட்டார். மகள் இறந்த துக்கத்தில் இருந்த  சத்யாவின் தந்தை மாணிக்கமும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரத்தில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது.

முதலில் ஒருதலைக்காதல் என கூறப்பட்டது. பின்னர், இருவரும் அருகே வீடுகளில் வசித்து வருவதாகவும், பல ஆண்டுகளாக காதலித்ததாகவும் தகவல்கள் பரவின. இதற்கிடையில்,  32வயதான சதீஷ் 22 வயதான சத்யாவை காதலிக்கவும், திருமணம் செய்துகொள்ள வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக காவல்துறையில் இருமுறை புகார் கொடுக்கப்பட்டதாகவும், ஆனால் காவல்துறையினர் சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்காமல், இரு தரப்பினரையும் அழைத்து பேசி கட்டப்பஞ்சாயத்து செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுகிறது. டந்த 4 மாதத்திற்கு முன் ஏற்பட்ட பிரச்சனையில் சதீஷ் சத்தியாவை கன்னத்தில் அறைந்ததால் அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்து பின் சதீஷை எச்சரித்து எழுதி வாங்கிக்கொண்டு வெளியே விட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

இந்த நிலையில்தான்  சத்யாவிற்கு மாப்பிள்ளை பார்த்த பெற்றோர்,  வேறொரு நபருடன் திருமணம் பேசி முடித்துள்ளனர். இதனால் கோப மடைந்த சதீஷ், சத்தியா கல்லூரி செல்லும் வழியில், பரங்கிமலை ரயில் நிலையத்தில்  வைத்துஅவருடன் தகராறு செய்ததுடன், அவரை ரயில்முன் தள்ளி கொலை செய்துவிட்டு  தப்பி ஒடியதும் தெரிய வந்தது. பின்னர் கைது செய்யப்பட்ட சதீஷை போலீசார் சைதாப்பேட்டை 9வது குற்றவியல் நீதிமன்ற நடுவர் மோகனாம்பாள் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய நிலையில், சதீஷுக்கு வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி நடுவர் மோகனாம்பாள் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து சதீஷை போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

ஏற்கனவே கொல்லப்பட்ட சத்தியா குடும்பத்தார் தரப்பில் சதீஷ் மீது இதுவரை 3 முறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் பெரிய அளவில் நடவடிக்கை எடுக்காமல் சமாதானம் பேசி அனுப்பி வைத்துள்ளதாகவும், போலீசாரின் அலட்சியமே இந்த இரு உயிரிழப்பிற்கு காரணம் எனவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் காவல்துறையினர் முறையாக செயல்படவில்லை குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ள நிலையில், சத்யா  கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.