கரூர்: கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் பள்ளியின் 2வது மாடியில் இருந்து 9ம் வகுப்பு மாணவி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த மாணவி தவறி விழுந்தாரா? அல்லது தற்கொலை முயற்சியாக குதித்தாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கரூர் ஆச்சிமங்கலத்தில் பிரபல தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில், நேற்று (17ந்தேதி) வழக்கம்போல பள்ளிக்கு சென்ற 9 வகுப்பு மாணவி ஒருவர் 2வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த மாணவி 2வது மாடியில் இருந்து கீழே விழுந்ததாக பள்ளி நிர்வாகம், மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், கீழே விழுந்த மாணவி அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், ககீழே விழுந்தததில், அவரது இடுப்பு பலமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், மாணவிக்கு இடுப்புக்கு கீழ் பகுதி செயல்படவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாணவியன் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியில் கூடினர். தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவியை பார்த்து பெற்றோர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
மாணவி எப்படி 2வது மாடியில் இருந்து தவறி விழுந்தார் என கேள்வி எழுப்பும் மாணவியின் பெற்றோர், தவறி விழும் அளவுக்கா மாடியில் சுவர் உள்ளது என்றும், அல்லது யாராவது மாணவியை தள்ளி விட்டனாரா, அல்லது ஆசிரியர்கள் திட்டியதால் மாணவி மனமுடைந்து தற்கொலை முயற்சி மேற்கொண்டாரா என பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.