டெல்லி: ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தகுதி தேர்வு சோதனைகள் கடுமையாக்கப்படும் என்றும்,  குறைந்தது 69 மதிப்பெண்கள் பெற்றாதால் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

முறையாக தகுதி தேர்வு நடத்தாமல் பணம் பெற்றுக்கொண்டு ஆர்டிஓ அலுவலகங்களில் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுவதாக ஏராளமான புகார்கள் எழுந்துள்ளன. இதனால் வாகன விபத்துக்குளும் அதிகரித்து வருகின்றன. இதைருத்தில் கொண்டே ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தகுதி தேர்வைக் கடுமையாக்க முடிவு செய்திருப்பதாகவும், பல்வேறு புதிய யுக்திகள் கொண்டு வரப்பட்டுள்ளன மத்திய  அமைச்சர் நிதின் கட்கரி  தொரிவித்து உள்ளார்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக ஓட்டுநர் உரிமம் புதுப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூன் மாதம் வழங்கப்பட்டுள்ள நிலையில்,  புதிதாக ஓட்டுநர் உரிமம்  வழங்குவது தொடர்பாக பாராளுமன்றத்தில் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு, ஓட்டுநர் உரிமங்களை நாடுபவர்கள் இப்போது கடுமையான திறன் சோதனைகளின் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும், அதில் ஒரு வாகனத்தை தகுதிபெற நியாயமான வாகனத்தை துல்லியமாக திருப்புதுவது, ரிசர்ஸ் எடுப்பதுடன்,  தேர்ச்சி சதவீதம் 69 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும்  மத்திய அமைச்சர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில்,

ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான மதிப்பெண் 69 சதவீதத்தைத் தாண்ட வேண்டும். அப்போது தான் வாகன ஓட்டிகள் உரிமம் பெற முடியும்.

வாகனத்தில் ரிவர்ஸ் கியர் இருந்தால் கண்டிப்பாக வாகனத்தைப் பின்னால், வலதுபுறம், இடதுபுறம் திருப்புவது என அனைத்தும் துல்லியமாக இருக்க வேண்டும்”

மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989 இன் விதிகளின்படி, அனைத்து பிராந்திய போக்குவரத்து அலுவலகங்களிலும் (ஆர்டிஓ) ஓட்டுநர் உரிமம் பெற தகுதி பெறுவதற்கான தேர்ச்சி சதவீதம் 69 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது

“வாகனத்தில் ரிவர்ஸ் கியர் வைத்திருந்தால், வாகனத்தை பின்னோக்கி ஓட்டுவது, அதை வலதுபுறமாகவோ அல்லது இடதுபுறமாகவோ திரும்புதல் மற்றும்  கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வகையில்,  நியாயமான துல்லியத்துடன் வரையறுக்கப்பட்ட அளவில், ஓட்டுநர் திறன் தேர்வில் தகுதி பெற வேண்டும்.

மேற்கண்ட ஏற்பாட்டின் படி ஓட்டுநர் திறன் சோதனை நடத்துவதன் நோக்கம் தகுதி வாய்ந்த / திறமையான ஓட்டுனர்களை உருவாக்க முடியும்.

டெல்லியில் ஓட்டுநர் பயிற்சி அளிப்பதற்காக 50 க்கும் மேற்பட்ட மோட்டார் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் அல்லது நிறுவனங்கள்  என்.சி.டி அரசாங்கத்தின் போக்குவரத்துத் துறையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்றார்.

“உண்மையான ஓட்டுநர் திறன் சோதனை தொடங்குவதற்கு முன்பு, ஓட்டுநர் டெஸ்ட் டிராக்கில் அவர்கள் செயல்படும் விதம் குறித்து அவர்களுக்கு வீடியோ டெமோ இணைப்பு வழங்கப்படுகிறது.

ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் பதிவு சான்றிதழ் தொடர்பான சில சேவைகள் தன்னார்வ அடிப்படையில் ஆதார் அங்கீகாரத்தின் உதவியுடன் ஆன்லைனில் முழுமையாக செய்யப்பட்டுள்ளன.

குடிமக்கள் இந்த சேவைகளை தொந்தரவில்லாமல் பெறவும், பிராந்திய போக்குவரத்து அலுவலகங்களில் காத்துகிடக்கும் அவலத்தை தடுக்கும் வகையிலும், இந்த சேவை ஏற்படுத்தப்பட்ட உள்ளது. இதனால்,  பிராந்திய போக்குவரத்து அலுவலகங்களின் அதிகாரிகளின் செயல்திறனை அதிகரிக்கும் என்று நம்ப்படுகிறது.

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யுனியன் பிரதேசங்க்களுக்கும் இந்த விஷயத்தில் விழிப்புணர்வு அளிக்குமாறு கடிதம் எழுதியுள்ளது, இதனால் அவர்கள்  விரைவில் இந்த சேவைகளை தொடங்குவார்கள்.

‘”புதிய மோட்டார் வாகனங்களை பதிவு செய்வதற்கு, பதிவு செய்ய விண்ணப்பிக்கும் பொறுப்பு மோட்டார் வாகனங்கள் (திருத்தம்) சட்டம், 2019 டீலர்களுக்கு மாற்றப்படுகிறது.

மேலும்,  ஓட்டுநர் உரிமத்தை காலாவதியாகும் நபர்கள் ஒரு வருடத்திற்கு இடையில் எப்போது வேண்டுமானாலும் புதுப்பிக்க முடியும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.