மெதுவாக பணிபுரிந்த வங்கி பெண் ஊழியரை, எழுத்தாளர் ஜெயமோகன் கடுமையான வார்த்தைகளால் விமர்சிக்க…  நெட்டிசன்கள் பலரும் அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். “தொழிலாளர்கள் அனைவரையும் ஜெயமோகன் நிந்தித்துவிட்டார். அவர் மீது தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் சிலர் சொல்லி வருகிறார்கள்.
இந்த நிலையில், தொழிலாளர்களின் உரிமைக்காக எந்தவித சமரசமும் இன்றி தொடர்ந்து குரல் கொடுத்துவரும் தொழிற்சங்க பிரமுகர் பி இளங்கோ சுப்பிரமணியன், ஜெயமோகனை

வங்கி பெண்மணி - ஜெயமோகன்
வங்கி பெண்மணி – ஜெயமோகன்

விமர்சிப்பவர்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இவர் நம்மிடம் பேசும்போது, “பி.எஸ்.என். எல். நிறுவனத்தில் செயல்பட்ட என்.எப்.டி.ஈ. என்ற இடதுசாரி தொழிற்சங்கத்தில் நீண்ட காலம் சென்னை மாவட்ட செயலாளராக நான் இருந்தேன். பிறகு மாநில அமைப்புச் செயலாளராக இருந்தேன்.
அந்த சங்கத்தில் நாகர்கோயில் மாவட்டத்தில் சங்க பொறுப்பில் ஜெயமோகன் நீண்டகாலம் இருந்தார். சங்க முன்னோடியாக செயல்பட்டார். சங்கத்தின் அனைத்து போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள் அனைத்திலும் தீவிரமாக பங்கெடுத்தவர் அவர்” என்று நம்மிடம் தெரிவித்தார் இளங்கோ சுப்பிரமணியன்.
மேலும், அவர் தனது முகநூல் பதிவில் “வந்தனையும் நிந்தனையும்!” என்ற தலைப்பில் இது குறித்து எழுதியிருப்பதாவது:
“தொழிலாளி என்றால் வேலை செய்பவன் அதாவது   உழைப்பவன் என்று பொருள். இவனுக்குப் பெயர்தான்    ஒர்க்கர் (worker).
தொழிலாளர்களில் சிலர்  வேலை செய்யாமல் தட்டிக் கழிப்பது உண்டு. டாட்ஜ்
பண்ணுகிறவன், ஓப்பி அடிக்கிறவன் என்று சிலரைத் தொழில் நிலையங்களில் காண முடியும். இவனுக்குப்  பெயர் ஷர்க்கர் (shirker).
**
ஒர்க்கர் என்றுமே வந்தனைக்கு உரியவன். ஆனால் ஷர்க்கர் அப்படி அல்ல; அவன் நிந்தனைக்கு உரியவன்.   ஒர்க்கரைப் போற்றுவதும் ஷர்க்கரை நிந்திப்பதும்  பாட்டாளி வர்க்கத்தின் பண்பு; இயல்பான பண்பு.
**
ஷர்க்கரான ஒரு பெண்மணியை ஜெயமோகன்   நிந்திக்கிறார். இதில் என்ன தவறு? இதுதானே
பாட்டாளி வர்க்கப் பண்பு? சின்சியர் ஒர்க்கர் என்று  பெயரெடுத்த ஜெயமோகன் வேறு எப்படி நடந்து   கொள்ள முடியும்? இதே ஜெயமோகன் டெலிபோன்  பில் கவுன்டரில் வேலை செய்ததை நான்  பார்த்திருக்கிறேன். எனவே அவருக்கு அதில் கருத்துச் சொல்லவும், ஷர்க்கரை நிந்திக்கவும்  உரிமை உண்டு. ஏனெனில் அவர் ஒர்க்கராக இருந்தவர்.
இளங்கோ சுப்பிரமணியன்
இளங்கோ சுப்பிரமணியன்

**
ஷர்க்கர் சூப்பர்வைசர்களை அதிகாரிகளைக்  காக்காய் பிடிப்பான். வேலைநிறுத்த நாளில் முதல் ஆளாய் வந்து வேலை செய்வான். அவன் மீது நடவடிக்கை எடுக்க முடியாது.
**
ஜெயமோகன் குறிப்பிட்ட அந்தப் பெண்மணி, சீரழிந்து  போன வேலைக் கலாச்சாரத்தின் (work culture) பிரதிநிதி.
ஜெயமோகன் தனிப்பட்ட ஒரு பெண்மணியைத்  தாக்கவில்லை; மாறாக, சீரழிந்து போன வேலைக்  கலாச்சாரத்தையே தாக்குகிறார்.
**
வங்கியின் கவுன்டர் (counter) பணி என்பது செய்கையின் வேகத்தை (velocity of action) அதிகபட்ச அளவில் கோருவது.  அங்கு ஆமை வேகம் அனுமதிக்க முடியாதது. கண்டனத்திற்கு உள்ளாகும். இது இயற்கையே.
**
இந்த விஷயத்தில் ஜெயமோகனைக் கண்டிக்கிற அனைவரும் (repeat அனைவரும்) ஒன்று முட்டாள்கள் அல்லது ஹிப்போகிரிட்கள்!”