மும்பை
புல்வாமா தாக்குதலி புகழ்ந்து இணைய தளங்களில் பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 45 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பு ஜெய்ஷ் ஈ முகமது இயக்கம் பொறுப்பேற்றுளது. உலகத் தலைவர்கள் இந்த தாக்குதலுக்கு கனனம் தெரிவித்து வருகின்றனர்.
அதே நேரத்தில் ஒரு சிலர் இந்த தாக்குதலுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக சமூக வலை தளங்களில் பதிவுகளை இடுகின்றனர். காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த ரியாஸ் அகமது என்பவர் மும்பையில் உள்ள ஒரு மருந்து நிறுவனத்தில் பணி புரிகிறார். இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் புல்வாமா தாக்குதல் ஒரு உண்மையான துல்லிய தாக்குதல் என புகழ்ந்து பதிவிட்டார்.
இதற்கு ஆயிரக்கணக்கானோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த பதிவு குறித்துஅறிந்த அவர் பணிபுரியும் நிறுவனம் அவரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்துள்ளது. அத்துடன் இன்னும் 7 நாட்களுக்குள் அவர் செய்கைக்கு விளக்கம் அளிக்காவிட்டால் அவர் பணி நீக்கம் செய்யப்படுவார் எனவும் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அலகாபாத் நகரை மையமாக கொண்டு இயன்க்கும் ஒரு காப்பீட்டு நிறுவனத்தில் இக்பால் உசைன் என ஒருவர் பணி புரிந்து வருகிறார். இவரும் புல்வாமா தாக்குதலை புகழ்ந்து பதிவிட்டுள்ளார். இதன் காரணமாக இவரை காப்பிட்டு நிறுவனம் பணியிடை நிக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் புல்வாமா தாக்குதலை வரவேற்பதாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். பல்கலைக்கழக நிர்வாகம் அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளது. அத்துடன் அவர் மீது காவல்துறையிடம் புகார் செய்யபட்டதால் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.