சென்னை:
தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கை மீறி வெளியில் நடமாடினால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி திரிபாதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காவல்துறையின் சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு ஆளாகாமல் மக்கள் தவிர்க்கும்படி அவர் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த 10-ம் தேதி முதல் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. எனினும் மக்கள் இந்த முழு ஊரடங்கை முறையாக கடைபிடிக்காமல் வெளியில் நடமாடுவதாகவும், அதிக அளவு வாகனங்கள் வெளியில் செல்வதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்தன.
இது தொடர்பாக இன்று கூடிய அனைத்துக் கட்சி கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது. இதன் விளைவாக முழு ஊரடங்கை கடைப்பிடிக்காமல் வெளியில் நடமாடினால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி திரிபாதி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.கரோனா வழிகாட்டுதலை ஒரு சிலர் சரியாக பின்பற்றாததால் தொற்று மேலும் பரவ வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார்.