ஊரடங்கு குறித்து அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

Must read

சென்னை:
ரடங்கு குறித்து அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதுகுறித்த சந்தேகங்களுக்கு 044-46122300, 044-25384520 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம், கொரோனா குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் கட்டுப்பாட்டு மையம் என்று தெரிவித்துள்ளார். நடிகர் விவேக் மறைவு குறித்து அவதூறு பரப்பினால் வழக்குப்பதிவு செய்யப்படும் என ஆணையர் கூறினார். சமூக வலைத்தளங்களில் மறைவு குறித்து அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். மேலும் ஊரடங்கு பற்றி அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படாது ஆனால் கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்படும் என கூறினார். தடுப்பூசி குறித்த அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னையில் உணவகங்களில் பார்சலுக்கு மட்டும் அனுமதி என்ற உத்தரவு பிறப்பிக்கப்படும். திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நபர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும். புதிய கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு இன்று அல்லது நாளை அதிகாரப்பூர்வமாக வெளியாகும். வழிபாட்டு தலங்கள், விளையாட்டு மைதானங்களிலும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும். தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக மன்சூர் அலிகான் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி அதிக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. விவேக் மரணத்தை வைத்து தவறான செய்திகளை பரப்ப வேண்டாம். கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

More articles

Latest article