சென்னை: வங்கக்கடலில் உருவாகும் மான்டஸ் புயல் காரணமாக, சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், புயலால் பாதிக்கப் படும் என எதிர்பார்க்கப்படும் 6 மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.

அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மாண்டஸ் புயலாக வலுபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளத. இதன் காரணமாக 7, 8, 9ந்தேதி வரை மழையும், பலத்த காற்றும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த உள்ளது. இந்த புயல்,  8-ந் தேதி தமிழக கரையை கடக்கும் என தெரிவித்து உள்ளது. இதையடுத்து, அரக்கோணத் தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினர் 6 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அதன்படி, பேரிடர் மீட்பு படையின் கமாண்டன்ட் அருண் உத்தரவின் பேரில் புதுச்சேரிக்கு 3 படை குழுவினரும்,  மேலும் 6 குழுக்கள் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, சென்னை ஆகிய மாவட்டத்திற்கு 25 பேர் கொண்ட மீட்புப் படை வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்ட உள்ளனர்.  அவர்கள் புயல் மழை எச்சரிக்கை முன்னேற்பாடு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.