சென்னை: காரைக்கால் – மாமல்லபுரம் இடையே நாளை மறுநாள் புயல் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரக்கோணத்தில் இருந்து தேசிய பாதுகாப்பு படையனிர், பாதிப்புக்குள்ளாகும் என அச்சப்படும் பகுதிகளுக்கு விரைந்துளளனர். முதல்கட்டகமாக கடலூருக்கு தேசிய பேரிடர் படையைச் சேர்ந்த 6 குழு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரம் அடைந்துள்ளது. இந்த நிலையில்., தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் கடந்த வாரம் உருவான காற்று சுழற்சி படிப்படியாக வடகிழக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்தமாக மாறியது. அந்த காற்றழுத்தம் மேலும் வலுப்பெறத் தொடங்கி காற்றழுத்த தாழ்வுப் பகுதி படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறத் தொடங்கியுள்ளது.
காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று புயலாக மாறி 25ம் தேதி சென்னைக்கும் காரைக்காலுக்கும் இடையில் கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவித்து உள்ளது.
தற்போது இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாகமா உருவெடுத்து உள்ளது. இதற்கு நிவர் என பெயரிடப்பட்ட நிலையில், நிவர் பயுல் சென்னையிலிருந்து 740 கிலோமீட்டர் , புதுச்சேரியில் இருந்து 700 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. நாளை மறுநாள் பிற்பகல் மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையை கடக்கிறது . இதையடுத்து, எண்ணூர், கடலூர், நாகை, பாம்பன், புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. வங்கக்கடலில் புயல் உருவாக உள்ளதால் தமிழகம் , புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. ராமநாதபுரம், சீர்காழி மீனவர்கள் தங்களது படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
இந்த நிலையில் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் படையினர் கடலூர், புதுச்சேரிக்கு விரைந்துள்ளனர். அரக்கோணத்தில் இருந்து ஆறு குழுக்களை சேர்ந்த 120 வீரர்கள் சாலை மார்க்கமாக விரைந்துள்ளனர். இவர்கள் கடலூர், நாகை உள்ளிட்ட கடலோர பகுதிகளில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். மேலும் கடலோர கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தல்களை வழங்குவார்கள். சேதம் ஏற்படும் பகுதிகள் கண்டறியப்பட்டால், அப்பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று தங்க வைப்பார்கள். தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழைக்கும் வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.