சென்னை: வடமேற்கு வங்கக்கடலில் தீவிர புயல் உருவாகி வருவதால்,  தமிழ்நாட்டின்  9 துறைமுகங்களில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் வடமேற்கு வங்கக்கடலில் தீவிர புயலாக வலுப்பெற்று வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து வருகிறது.

இது நாளை (அக்டோபர் 25 -ஆம்) தேதி நண்பகலில் கெபுபாரா மற்றும் சிட்டகாங் இடையே ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து வங்காளதேச கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

இதையடுத்து, புயல் உருவாகிய உள்ளதை” குறிக்கும் வகையில் நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களில், 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. அதன்படி,  , சென்னை, கடலூர், நாகை ,எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.