சென்னை:
ரும் 16ந்தேதி புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது. மத்திய வங்கக்கடல் பகுதியில் அதற்கான வாய்ப்பு உருவாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,  தெற்கு அந்தமான், தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி; 15 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 16 ஆம் தேதி புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து உள்ளது.
இந்த காலக்கட்டத்தில்   தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும்.
இந்த சூறாவளிக் காற்று, வரும் 15 ம்தேதி அன்று  மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் வீசும், அவ்வப்போது 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசும். மேலும், வரும் 16 ஆம் தேதி மணிக்கு 55-65 கி.மீ வேகம் முதல் 75 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசும்.
காற்று வேகமாக வீசும் என்பதால் தெற்கு, மத்திய வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம்;
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியில் 10 செ.மீ மழை பதிவு ஆகி உள்ளது,
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு; மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் வானிலை மையம் அறிவித்து உள்ளது.