சென்னை: நிவர் மற்றும் புரெவி புயல்களால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் உள்பட பல பகுதிகளில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை புயல் சேதம் குறித்து நேரில் ஆய்வு செய்கிறார். ஏற்கனவே கடலூர் பகுதியில் ஆய்வு செய்த நிலையில், நாளை மீண்டும் ஆய்வு செய்கிறார்.
வங்கக் கடலில் உருவான நிவர், புரெவி புயல்களால் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக கடலூர், திருவாரூர், நாகை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சேதம் மற்றும் நிவாரணம் குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். அவர்கள் புயல் மற்றும் வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரிடையாக சென்று ஆய்வு நடத்தி நிவாரண உதவிகள் வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை கடலூர் பயணம்- புயல் பாதிப்புகளை ஆய்வு செய்கிறார். அதைத்தொடர்ந்து, மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் சேதங்களை ஆய்வு செய்கிறார். நாளை மறுநாள் திருவாரூர், நாகையில் ஆய்வு செய்ய உள்ளார்.