சேலம்:
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சேலம் மாவட்டத்தில் நாளை முதல், மாலை 4 மணி வரை மட்டுமே கடைகள் செயல்படும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்து உள்ளார்.
சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. மாவட்டத்தில் நேற்று மட்டும் புதிதாக 23 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு இதுவரை 352 பேர் பாதிக்கப்பட் டுள்ள நிலையில், 204 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளர். 148 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், கொரோனா பரவலை தடுக்கும் வகையில், நாளை முதல் சேலம் மாவட்டத்தில் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே கடைகள் செயல்படும் என்றும், பேக்கரிகள், உணவகங்களில் பார்சல் மட்டுமே வழங்க வேண்டும் -சேலம் ஆட்சியர் ராமன் அவர்கள் உத்தரவிட்டு உள்ளார்.