சென்னை:
சென்னையில் நாளையுடன் முழு ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், வரும் திங்கட்கிழமை முதல் தேனீர், மளிகை கடை, காய் கறி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 வரை செயல்பட லாம் என்று புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதனால் சென்னை உள்பட 6 மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு நாளை நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில்,  சென்னைக்கு ஜூலை 6 முதல் மேலும் சில கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.