சென்னை: புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பினை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர்  ஸ்டாலின், இந்தியப் பிரதமர்  மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தேசிய மருத்துவ ஆணையம் (National Medical Commission) சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பினால், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து பிரதமர் மோடிக்கு, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார்.

புதிய மருத்துவக் கல்லூரி தொடங்குவது தொடர்பான தேசிய மருத்துவ ஆணைய அறிவிப்பை நிறுத்தி வைக்க வலியுறுத்த்தியுள்ளார். மருத்துவ ஆணைய அறிவிப்பால் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்குவதில் சிக்கல் உள்ளது. ஆணைய கட்டுப்பாட்டால் எதிர்காலத்தில் புதிய மருத்துவமனைகள், முதலீடு வருவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போய்விடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய கட்டுப்பாடு விதிப்பதன் மூலம், எதிர்காலத்தில் மருத்துவத் துறையில் புதிய மருத்துவமனைகளும், புதிய முதலீடுகளும் தமிழ்நாட்டிற்கு வருவதற்கான வாய்ப்பு முற்றிலுமாக இல்லாமல் போய்விடும் என்று குறிப்பிட்டு, தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பினை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டுமென்றும், இதுதொடர்பாக மாநில அரசுகளுடன் உரிய ஆலோசனைகளை மேற்கொள்ளத் தேவையான அறிவுரைகளை ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கு வழங்கிட வேண்டுமென்றும் கடிதத்தில்  வலியுறுத்தியுள்ளார்.