தேனி:

பெரியகுளம் நோக்கி சென்று கொண்டிருந்த முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., கார் மீது கல்வீசப்பட்டது.

அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக சசிஅதிமுக மற்றும் ஓபிஎஸ் அதிமுக என இரண்டு பிரிவாக உள்ளது.

இந்நிலையில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் கோவிலுக்கு சென்றுவிட்டு தேனிக்கு சென்றார் ஓபிஎஸ். அங்க ஆண்டிப்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.  பின்னர் அவர் தேனி நோக்கி காரில் தனது ஆதரவாளர்க ளுடன் சென்று கொண்டிருந்தார்.

அப்போது,  அரைப்படி தேவன்பட்டி கிராமம் அருகே கார்  வந்தபோது, மர்ம நபர்கள் சிலர் ஓ.பி.எஸ்., கார் மீது கற்களை வீசி விட்டு தப்பினர். இதனால்  கார் முன்பக்கம் லேசான சேதம் ஏற்பட்டது. கற்களை வீசியவர்கள் அருகிலிருந்த கரும்பு தோட்டத்திற்குள் புகுந்து தப்பி ஓடினர்.

கல்வீசியவர்கள் யார் என போலீசார் தேடி வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.