தஞ்சாவூர்:

குஜராத் அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்ட ராஜ ராஜ சோழன், உலோகமாதேவி சிலை 60 ஆண்டுகளுக்கு பின்பு தஞ்சை பெரிய கோயிலுக்கு கொண்டு வரப்பட்டன.

தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன் சிலை மற்றும் பட்டத்தரசி லோகமாதேவி சிலை கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு பெரிய கோவிலிருந்து திருடுபோனது. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த சிலைகள் குஜராத் அருங்காட்சியகத்தில் இருந்து தெரியவந்தது. இதையடுத்து தமிழக சிலை கடத்தல் பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் அந்த சிலைகளை மீட்டனர்.

60 ஆண்டுகளுக்கு பின் ராஜராஜ சோழன், உலோகமா தேவி சிலைகள் மீண்டும் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன. பொதுமக்கள், பக்தர்கள் உற்சாகமாக மலர்கள் தூவி சிறப்பான வரவேற்பு அளித்தனர்.