சென்னை: 6ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் செய்தாரா என்பது குறித்து விசாரிக்கப்படும் என்றும், நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதிகளிடம் இருந்து தற்போது வரை எந்த ஒரு விளக்கமும் வரவில்லை என தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

ஆனால், இரட்டை குழந்தை விவகாரம் குறித்து நயன் தம்பி நேற்று (ஞாயிறு) விசாரணைக் குழுவிடம் ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளதாக பிரபல ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. ஆனால், இன்று தங்களிடம் எந்தவொரு தகவலும் வரவில்லை  சுகாதாரத்துறை மறுத்துள்ளது. இது  சலசலபை ஏற்படுத்தி உள்ளது.

திருமணமாகி நான்கு மாதங்களே ஆனநிலையில் சில தினங்களுக்கு முன்பு விக்னேஷ் சிவன் தானும், நயன்தாராவும் அப்பா, அம்மா ஆகிவிட்டதாகவும், தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், நயன் குடும்பத்திலும் கடும் விமர்சனம் எழுந்துள்ளது. தாய்மை அடைவது என்பது எவ்ளோ பெரிய விஷயம். ஆனால் கல்யாணமாகி 4 மாதத்தில் குழந்தை பிறந்தது என கூறுகிறார்கள். எங்களால் வெளியே தலைகாட்ட முடியவில்லை என அவரது உறவினர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில்,  நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி 6 ஆண்டுகளுக்கு முன் பதிவு திருமணம் செய்துள்ளதாகவும், அதன் சட்டத்தை மீறவில்லை என்றும், அதற்கான ஆதாரங்களை விசாரணைக் குழுவிடம் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி,   சமர்ப்பித்துள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகின.

இதுகுறித்து கூறிய  சுகாதாரத்துறை  அதிகாரிகள், அவரது திருமணம் குறித்து,  பதிவாளர் அலுவலகத்தில் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளதுடன், அவர் குழந்தை பெற்ற  வாடகை தாய், மற்றும் மருத்துவமனை  கண்டறியப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தங்களிடம் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதிகளிடம் இருந்து தற்போது வரை எந்த ஒரு விளக்கமும் வரவில்லை என்று கூறியுள்ளது.