சென்னை: தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்ய, அதிமுக எம்எல்ஏக்கள் மத்தியில் காரசார விவாதங்கள் நடைபெற்று வருகிறது. சுமார் 2 மணி நேரமாக நடந்து வரும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை. அங்கு பரபரப்பு நிலவி வருவதால், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வெளியே அதிரடிப் படை காவல்துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுளள்னர்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 66 இடங்களில் வெற்றி பெற்றது. இதனால் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. ஆனால், அதிமுகவில் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவி வருகிறது. ஏற்கனவே நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படாத நிலையில், இன்று மீண்டும் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இன்றைய கூட்டத்தில் முன்னாள் சபாநாயகர் தனபால் எதிர்க்கட்சி தலைவராக ஓ.பி.எஸ் பெயரை முன்மொழிந்ததால் புதிய திருப்பம் ஏற்பட்டது. இருதுந்தாலும், திர்க் கட்சித் தலைவரை தேர்வு செய்வதில், ஓ.பி.எஸ் – இ.பி.எஸ். இருதரப்புக்கு இடையே தொடர்ந்து போட்டி நிலவி வருகிறது. இதனார். அதிமுக அலுவலகத்திற்கு வெளியே திடீரென அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.