ஞ்சை

ஞ்சையில் நேற்று முன் தினம் டாஸ்மாக் பாரில் விற்கப்பட்ட மதுவில் சயனைடு கலந்தது குறித்து தனிப்படையினர் விசாரணை செய்து வருகின்றனர்

                                           மரணமடைந்த இருவர்

தஞ்சை மாவட்டத்தில் டாஸ்மாக் பாரில் நேற்று முன்தினம் காலை மது குடித்த மீன் வியாபாரி குப்புசாமி(, கார் ஓட்டுநர் விவேக்(36) ஆகியோர் சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி விழுந்து இறந்தனர்.  தஞ்சாவூர் கிழக்கு காவல்துறையினர் பார் உரிமையாளர் பழனிவேல், பார் ஊழியர் காமராஜ் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பாருக்கு சீல் வைக்கப்பட்டது.

நேற்று முன்தினம் இரவு செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத் ஆகியோர் கூறும்போது, இறந்த 2 பேரும் சயனைடு கலந்த மதுவை அருந்தியதால் உயிரிழந்தது தடய அறிவியல் ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும், மதுவில் சயனைடு கலக்கப்பட்டது எப்படி என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது கொலை செய்யப்பட்டார்களா? என விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினர்.

கூடுதல் எஸ்.பி.க்கள் ஜெயச்சந்திரன், முத்தமிழ்ச்செல்வன் ஆகியோரது மேற்பார்வையில், டிஎஸ்பிக்கள் பட்டுக்கோட்டை பிரித்விராஜ் சவுகான், திருவிடைமருதூர் ஜாபர் சித்திக், திருவாரூர் பிரபு, தஞ்சாவூர் ராஜா, பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு டிஎஸ்பி ராஜ்குமார் ஆகியோர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடக்கிறது.