லண்டன்:

கேப்டவுனில் நடந்து வரும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய வீரர்ர் கேமரூன் பான்கிராப்ட் பீல்டிங்கின் போது தனது பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த ஒரு பொருளை எடுத்து தனது உள்ளாடைக்குள் போட்ட காட்சி வீடியோவில் பதிவானது.

அதை பயன்படுத்தி அவர் பந்தை சேதப்படுத்தி இருக்கலாம் என்று சந்தேகம் கிளம்பியது. பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் மீது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அதிரடி நடவடிக்கையை எடுத்தது. தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டிகளில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக டிம் பெயின் நியமனம் செய்யப்பட்டர்.

ஆஸ்திரேலிய வீரர் பான்கிராப்ட் மீதான பந்தை சேதப்படுத்திய ஸ்டீன் ஸ்மித் ஒப்புக்கொண்டார். தனக்கு தெரிந்தே இச்செயல் நடந்தது என்று அவர் தெரிவித்தார். இதையடுத்து ஸ்டீவ் ஸ்மித்துக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது. ஸ்டீவ் ஸ்மித்துக்கு போட்டி ஊதியத்தில் 100 சதவீதமும், பேன்க்ராஃப்ட்டுக்கு 75 சதவீதமும் பிடித்தம் செய்யவும் ஐசிசி உத்தரவிட்டுள்ளது