ஆடிட்டர் என்பதைத் தாண்டி, ஆர்.எஸ்.எஸ். பிரமுகர், துக்ளக் ஆசிரியர், ஆளும்கட்சி ஆலோசகர் என்று “பன் பன்” முகம் கொண்டவர் குருமூர்த்தி.
அவ்வப்போது தப்பும் தவறுமாக தகவல்களை ட்விட்டி சர்ச்சையில் சிக்குவார். இப்போது ஸ்டெர்லைட் குறித்த ஒரு தவறான பதிவை ட்விட்டியிருக்கிறார்.
ஸ்டெர்லைட் ஆலை நிகழ்வில் கலந்துகொண்ட அப்போதைய முதல்வர் ஜெயல்லிதா, “இந்தியாவிலேயே தமிழ்நாடு சிறந்த தொழில்வளம் மிகுந்த மாநிலமாகும்” என்று பேசினார்.
இதை கருணாநிதி பேசியது போல போலியான படத்தைப் பதிந்து இந்துத்துவ்வாதிகள் பரப்பி வருகிறார்கள்.
இதை நம்பி குருமூர்த்தியும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“ஒரு வார இதழின் ஆசிரியர், பிரபல இதழ்களில் கட்டுரை எழுதுபவர், கவனத்துடன் செய்திகளை பகிர வேண்டாமா?” என்று கேட்கிறார்கள் நெட்டிசன்கள்.