சென்னை: ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்ற அனுமதி கோரி வேதாந்தா தரப்பு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் இன்றைய விசாரணையின்போது, மூல வழக்கு நீதிமன்றம் விசாரணையில் இருப்பதால் அனுமதி அளிக்க முடியாது என தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான உயிர்கொல்லி நோய்களை உருவாக்கி வந்த ஸ்டெர்லைட் ராமிரா தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்திற்கு நடைபெற்ற மக்களி போராட்டத்தின்போது, காவல்துறையினர் நடத்திய காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கி சூட்டில் ஏராளமானோர் உயிரிழந்தனர். இதையடுத்து, கடந்த 2018ம் ஆண்டு தமிழக அரசு உத்தரவின் பேரில் ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட்டது.
ஆனால், கொரோனா தொற்று பரவலின்போது, நோயாளிகளின் ஆக்சிஜன் தேவைக்காக, உச்சநீதிமன்ற அனுமதியுடன் ஸ்டெர்லைட் ஆலை இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. அதற்கான அனுமதிய கடந்த ஏப்ரல் மாதம் 27-ம் தேதியோடு அனுமதி முடிவடைந்து ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
இதையடுத்து வேதாந்தா நிறுவனம் சார்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் தாக்கல் செய்தது. அந்த மனுவில், ஸ்டெர்லைட் ஆலையில் சக்திவாய்ந்த நச்சு பொருட்கள், ரசாயனம், ஆசிட் மற்றும் ஆபத்தான மூலப்பொருட்கள் அனைத்தும் அப்படியே உள்ளது. குறிப்பாக ஆக்சிஜன் தயாரிப்பின் போது பயன்படுத்தப்பட்ட எண்ணெய் கழிவுகளும் அவ்வாறே உள்ளது. எனவே உரிய கால அவகாசத்துடன் இந்த மூலப்பொருள் கழிவுகளை அகற்றி கொள்வதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த மனுவின் கடந்த விசாரணையின்போது, மனு குறித்து தமிழகஅரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கின் இன்றைய விசாரணை தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி துரைசாமி அமர்வில் நடைபெற்றது. . அப்போது தமிழக அரசின் சார்பாக வழக்கறிஞர் வீரா கதிரவன் ஆஜராகி பதில் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், ஆலையில் உள்ள மூலப்பொருட்களை ஆராய அமைக்கப்பட்ட குழு, அவற்றை அகற்ற பரிந்துரைக்கவில்லை. ஆலையில் இருந்து மூலப்பொருள், கழிவுகளை அகற்ற மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் பரிந்துரைக்கவில்லை. இந்த பிரதான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் மூலப்பொருளை அகற்ற அனுமதி தர இயலாது என்று தெரிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து அரசின் பதில் மனுவுக்கு வேதாந்தா தரப்பில் அவகாசம் கோரப்பட்டதால் வழக்கு ஒருவாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
[youtube-feed feed=1]