சென்னை:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிபதி அருணாஜெகதீசன் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
25-ம் தேதி தூத்துக்குடியில் உள்ள விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பி உள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு மே 22ந்தேதி அன்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து மே மாதம் 30ந்தேதி நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார். அப்போது பாதிக்கப்பட்ட 48 பேருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் நிதி அளித்தார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, சமூக விரோதிகளே தூத்துக்குடி வன்முறைக்கு காரணம் என்று தெரிவித்தார்.
முன்னதாக 2018ம் ஆண்டு மார்ச் 31ந்தேதி, ஸ்டெர்லைட் தொடர்பாக பதிவிடப்பட்ட டிவிட்டில், ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று 47 நாட்களாக அவதிப்பட்டு போராடிக்கொண்டிருக்கும் போது, தொழிற்சாலை நடத்த அனுமதி கொடுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது புரியாத புதிராக உள்ளது என்று கருத்து தெரிவித்திருந்தார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, சமூக விரோதிகளே தூத்துக்குடி வன்முறைக்கு காரணம் என்று நடிகர் ரஜினிகாந்த் எதை வைத்து கூறினார், அப்படியானால் அவருக்கு சமூக விரோதிகள் யார் என்பது தெரியுமா? என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த நிலையில், வரும் நடிகர் ரஜினி காந்துக்கு, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், ரஜினி ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளது. வரும் 25ந்தேதி ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மனில் தெரிவித்து உள்ளது.
ஸ்டெர்லைட் தொடர்பாக ரஜினியின் கருத்துக்கள் என்ன… அது தொடர்பான செய்திகள்…
‘புரியாத புதிர்:’ ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ரஜினிகாந்த் டுவிட்
சமூக விரோதிகளே தூத்துக்குடி வன்முறைக்கு காரணம்! : ரஜினிகாந்த்
மக்கள் என்னை பார்த்தால் மகிழ்ச்சி அடைவார்கள்: தூத்துக்குடி செல்லும் ரஜினிகாந்த் ‘பஞ்ச்’