தமிழக அரசுக்கு ஸ்டெப்ஸ் அமைப்பு நன்றி…..!

Must read

 

கொரோனா அச்சுறுத்தலால் தமிழ்த் திரையுலகில் இரண்டு மாதங்களாக எந்தவொரு படப்பிடிப்புமே நடைபெறாமல் இருந்தது.
தொழில்துறைக்கு தமிழக அரசு அனுமதியளித்த நிலையில் , தமிழ்த் திரையுலகினரும் படப்பிடிப்பு தொடங்க அனுமதி வழங்க கோரினார்கள்.
முதலில் இறுதிக்கட்டப் பணிகளுக்கு மட்டுமே அனுமதி அளித்தது தமிழக அரசு , அதனைத் தொடர்ந்து சின்னத்திரை படப்பிடிப்புக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதியளித்துள்ளது. இதற்கு தென்னிந்திய தொலைகாட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஸ்டெப்ஸ் தலைவர் சுஜாதா விஜயகுமார்:-
படப்பிடிப்பு மீண்டும் தொடங்க எங்களுக்கு அனுமதி வழங்கிய முதல்வருக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
நானும் ஸ்டெப்ஸ் பொதுச் செயலாளருமான குஷ்பு சுந்தர் தகவல் மற்றும் விளம்பர அமைச்சர் கடம்பூர் ராஜுவை சந்தித்து மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்க கோரிக்கை வைத்தோம் அதை முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்வேன் என்று உறுதியளித்தார். ஷூட்டிங் தொடங்க எங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்ற நற்செய்தியை அவர் துரிதமாகக் கூறினார். இந்த சந்தர்ப்பத்தில் தகவல் மற்றும் விளம்பர அமைச்சருக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளார் .
ஸ்டெப்ஸ் செயலாளர் குஷ்பு சுந்தர் :-
கடந்த 70 நாட்களாக படப்பிடிப்பு இல்லாததால் எங்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள் அனைவரும் மிகவும் பாதிக்கப்பட்டனர். இதனால் அமைச்சர் கடம்பூர் ராஜுவை அணுகினோம். இப்போது சில கட்டுப்பாடுகளுடன் பணிகளை மீண்டும் தொடங்குவதற்கான அனுமதி எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி எங்களுக்கு ஒரு வரமாக வந்துள்ளது. ‘
அரசாங்கம் வகுத்துள்ள விதிகள் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை நாங்கள் பின்பற்றுவோம் என்று உறுதியளிக்கிறோம். மிக விரைவில், நாங்கள் வேலையைத் தொடங்குவோம். ஒரு நல்ல செய்தி விரைவில் உங்கள் அனைவரையும் வந்தடையும்” என கூறியுள்ளார் .

More articles

Latest article