“எப்போதும் படிகள் வலிமையாக இருக்கும்”: ராகுல் காந்தியின் யாத்திரையில் கணவர், மகனுடன் கலந்துகொண்ட பிரியங்கா…

Must read

போபால்: ராகுல் காந்தியின்  பாரத் ஜோடோ யாத்திரை இன்று மத்திய பிரதேசத்தில் தொடங்கிய நிலையில், இந்த யாத்திரையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா வத்ரா தனது கணவர் மற்றும் மகனுடன் கலந்துகொண்டார். இதுகுறித்து கூறிய பிரியங்கா “எப்போதும் படிகள் வலிமையாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

குமரி முதல் காஷ்மீர் வரையிலான பாரத் ஜோடோ என்ற பெயரிலான ஒற்றுமை யாத்திரை தற்போது பல்வேறு மாநிலங்களை கடந்து, நாட்டின் மையப்பகுதியான மத்திய பிரதேசத்தில் நுழைந்துள்ளது. கடந்த செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரையானது  கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா வழியாக மராட்டிய மாநிலத்தை அடைந்தது. நேற்று காலை, மத்தியபிரதேச எல்லையை ஒட்டிய மராட்டிய மாநில பகுதியில் இருந்து பாதயாத்திரை தொடங்கி மத்திய பிரதேசத்திற்குள் நுழைந்தது. ம.பி. காங்கிரசாரின் பெருத்த வரவேற்பில், இருமாநில எல்லையில் உள்ள போடர்லி என்ற கிராமம் வழியாக மத்தியபிரதேசத்துக்குள் நுழைந்தன.

மத்தியபிரதேச மாநிலத்தில் மட்டும் 12 நாட்கள் ராகுலின் யாத்திரை நடைபெறுகிறது. அங்கு 380 கி.மீ. தூரம் நடைபயணம் மேற்கொள்கிறார்.  இந்த நிலையில், இன்றைய யாத்திரை போர்கானில் இருந்து இன்று மீண்டும் தொடங்கியது. இதில், ராகுலுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் அவரது கணவர் ராபர்ட் வத்ரா, பிரியங்கா காந்தி மகன் ரைஹான் வத்ரா ஆகியோர் இணைந்து நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பல்வேறு காங்கிரஸ் தலைவர்களும் யாத்திரையும் பங்கேற்றுள்ளனர்.

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article