சென்னை
தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் பன்னாட்டு நிறுவனமான ஸ்டெல்லண்டிஸ் இணைந்துள்ளது.
தமிழக அரசின் ’நான் முதல்வன்’ திட்டம் திறன் மேம்பாட்டு நிலப்பரப்பை மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முன்முயற்சிஆகும். தற்போது இந்த திட்டத்தில் ஆட்டோமோட்டிவ் மற்றும் மொபிலிட்டி துறைகளில் உலகளாவிய முன்னணி நிறுவனமான ஸ்டெல்லாண்டிஸ் இணைந்துள்ளது. இக்கூட்டணி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை தொழில்துறை தொடர்பான திறன்களுடன், குறிப்பாக வாகனத் துறையில், வளரும் வேலை சந்தைக்கு அவர்களை சிறப்பாக தயார்படுத்துவதில் கவனம் செலுத்த உள்ளது.
இந்தக் கூட்டணியில் முக்கிய அங்கம் ஒரு ஆசிரியர் மேம்பாட்டுத் திட்டம் (FDP) ஆகும், இது மின் மற்றும் மின்னணு பொறியியல் (EEE), மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல் (ECE), இயந்திரப் பொறியியல் மற்றும் ஆட்டோமொபைல் பொறியியல் போன்ற துறைகளில் மாணவர்களின் நிபுணத்துவத்தை மேம்படுத்துவதுடன் மாணவர்களுக்கு அவர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் தொழில் சார்ந்த பாடத்திட்டம் கற்பிக்கப்பட உதவி செய்கிறது.
இந்த திட்டத்தில் நடைபெற உள்ள ஸ்டெல்லாண்டிஸின் மூத்த நிர்வாகிகள் மற்றும் பொருள் வல்லுநர்கள் உட்பட 25 க்கும் மேற்பட்ட நிபுணர்களின் 20 அமர்வுகள் வாகன வடிவமைப்பு, பொறியியல், பவர்டிரெய்ன் தொழில்நுட்பங்கள் மற்றும் தன்னாட்சி மற்றும் இணைக்கப்பட்ட வாகனங்களின் வளர்ச்சி ஆகியவற்றில் முக்கிய பங்குகளில் மாணவ்ர்களுக்கு பயிற்சி அளிக்கும்.
இதனால் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 10,000 மாணவர்கள் பயனடைகின்றனர். பயிற்சி முடிந்ததும் அளிக்கப்படும் சான்றிதழ் மாணவர்களின் மேம்படுத்தப்பட்ட மற்றும் மேம்பட்ட அறிவை உறுதி செய்கிறது. தமிழகத்தில் வாகன உற்பத்தில் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,