சென்னை: தமிழ்நாட்டில் முக்கிய தலைவர்கள் 9 பேருக்கு சிலைகள் அமைக்கப்படும் என சட்டப் பேரவையில் அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.  மேலும்,  தலைமைச் செயலகப் பத்திரிகையாளர்கள் அறை ரூ.16.75 இலட்சம் மதிப்பீட்டில் அடிப்படை வசதிகளுடன் மேம்படுத்தப்படும்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, இரட்டைமலை சீனிவாசன், ஜி.டி.நாயுடு உள்பட 9 பேர் சிலைகள் நிறுவப்படும் என்று கூறியவர்  தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தனது துறைகளுக்கான முக்கிய அறிவிப்பினை வெளியிட்டார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை மானிய கோரிக்கை கூட்டத்தொடர் நேற்று 4-வது நாளாக நடைபெற்றது. இதில்  தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தனது துறைகளுக்கான முக்கிய அறிவிப்பினை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

1) சென்னை காந்தி மண்டப வளாகத்தில் சுதந்திரப் போராட்ட வீரமங்கை இராணி வேலு நாச்சியார் அவர்களுக்கு ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் திருவுருவச் சிலை நிறுவப்படும்.

2) சிவகங்கைச் சீமையை ஆண்ட மருது சகோதரர்களுக்கு சிவகங்கையில் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் திருவுருவச்சிலை நிறுவப்படும்.

3) தமிழ்நாட்டில் முதன் முதலில் அச்சு இயந்திரத்தை நிறுவி தமிழுக்குப் பெருமை சேர்த்த சீகன் பால்கு அவர்களுக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும்.

4) சிந்துவெளி நாகரிகத்தை வெளிபடுத்திய தொல்லியல் துறையின் தலைமை இயக்குநராகப் பணிபுரிந்த சர். ஜான் ஹூபர்ட் மார்ஷல் அவர்களுக்குச் சென்னையில் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் திருவுருவச் சிலை நிறுவப்படும்.

5) அறிவியல் விஞ்ஞானி ஜி.டி நாயுடு அவர்களுக்குக் கோயம்புத்தூரில் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் திருவுருவச்சிலை நிறுவப்படும்.

6) திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் மேனாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் திருவுருவச் சிலை

7) மேனாள் இந்தியப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்களுக்கு சென்னையில் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் திருவுருவச்சிலை நிறுவப்படும்.

8) தியாகி வை. நாடிமுத்துப்பிள்ளை அவர்களுக்கு தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் திருவுருவச் சிலை நிறுவப்படும்.

9) காவேரி மீட்புக் குழுவில் இணைந்து போராடியவரும், விவசாயிகளின் நலன்களுக்காகப் பாடுபட்டவருமான கரூர் சி.முத்துசாமி அவர்களுக்கு ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் திருவுருவச்சிலை நிறுவப்படும்..

10) செய்தி மக்கள் தொடர்புத் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள 31 மணிமண்டபங்கள்/அரங்கங்களில் பாதுகாப்பு மற்றும் தூய்மைப் பணிகள் உள்ளிட்ட மேலாண்மைப் பணிகள் தொடர் செலவினமாக ஆண்டுதோறும் ரூ.3.25 கோடியில் மேற்கொள்ளப்படும்.

11) செய்தி மக்கள் தொடர்புத்துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள மணிமண்டபங்கள்/அரங்கங்கள் பராமரிப்புப் பணிகள் முதற்கட்டமாக ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

12) திவான்பகதூர் திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த நாளான ஜூலை திங்கள் 7ஆம் நாள் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.

13) சுதந்திரப் போராட்டத் தியாகி அஞ்சலை அம்மாள் அவர்களின் பிறந்த நாளான ஜூன் திங்கள் 1ஆம் நாள் கடலூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.

14) மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பெருங்காமநல்லூரில் ஆங்கிலேய ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராடித் தங்கள் இன்னுயிரை ஈந்த 16 வீரத் தியாகிகளுக்கு ஏப்ரல் திங்கள் 3ஆம் நாள் மதுரை மாவட்டத்தில் ஆண்டுதோறும் நினைவு நாளாகக் கடைபிடிக்கப்படும்.

வேலு நாச்சியார் முதல் இந்திரா காந்தி வரை… 9 முக்கிய தலைவர்களுக்கு திருவுருவச்சிலை – அமைச்சர் அறிவிப்பு!
15) சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் பிறந்த நாளான அக்டோபர் திங்கள் 9ஆம் நாள் இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.

16) அல்லாள இளைய நாயக்கர் அவர்களின் பிறந்த நாளான தைத் திங்கள் 1ஆம் நாள் நாமக்கல் மாவட்டத்தில் ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.

17) சுதந்திரப் போராட்டத் தியாகி கு.மு.அண்ணல் தங்கோ அவர்களின் பிறந்த நாளான ஏப்ரல் திங்கள் 13ஆம் நாள் வேலூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.

18) மேனாள் சென்னை மாகாண முதலமைச்சர் ப.சுப்பராயன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் திங்கள் 11ஆம் நாள் சென்னையில் ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.

19) மேனாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளான அக்டோபர் திங்கள் 15ஆம் நாள் சென்னையில் ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.

20) டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் அவர்களின் பிறந்த நாளான ஜூலை திங்கள் 7ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.

21) ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதர் அவர்களின் பிறந்த நாளான மார்ச் திங்கள் 1ஆம் நாள் திருச்சி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.

22) சர். ஏ.டி பன்னீர்செல்வம் அவர்களின் பிறந்த நாளான ஜூன் திங்கள் 1ஆம் நாள் திருச்சி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.

23) தமிழறிஞர் டாக்டர் மு.வரதராசனார் அவர்களின் பிறந்த நாளான ஏப்ரல் திங்கள் 25ஆம் நாள் இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்

24) எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் திங்கள் 19ஆம் நாள் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.

25) சென்னை தலைமைச் செயலகப் பத்திரிகையாளர்கள் அறை ரூ.16.75 இலட்சம் மதிப்பீட்டில் அடிப்படை வசதிகளுடன் மேம்படுத்தப்படும்.

தமிழ் வளர்ச்சி குறித்த அறிவிப்பு வருமாறு :

1. 2025-ஆம் ஆண்டு முதல் ஜனவரி மாதம் 25-ம் நாளினை ’தமிழ்நாடு தியாகிகள்’ நாளாக கடைபிடிக்கப்படும்.

2. 2025-ஆம் ஆண்டு முதல் ஜூன் மாதம் 3-ம் நாளினை ‘செம்மொழிநாள் விழா’-வாகக் கொண்டாப்படும்.

3. தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும்.

4. சிறந்த நூல்களை எழுதும் நூலாசிரியர், நூலைப் பதிப்பிக்கும் பதிப்பகத்திற்கு பரிசுத் தொகை உயர்த்தி வழங்கப்படும்.

5. கவிஞர் முடியரசன்ர்களுக்கு சிவகங்கை மாவட்டத்தில் ரூ.50 இலட்சம் திருவுருவச்சிலை நிறுவப்படும்.

6. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பெயரில் புதிய விருது வழங்கப்படும்.7. சண்டிகர் தமிழ் மன்றத்தின் கட்டட விரிவாக்கப் பணிகளுக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.

8. டெல்லி தமிழ்ச் சங்கத்தின் கலையரங்கத்தினைப் புனரமைக்க ரூ.50 லட்சம் வழங்கப்படும்.