சென்னை: தமிழ்நாட்டில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுட்டு உள்ளது.

அனுமதியின்றி சாலைகளிலும், பொதுஇடங்களிலும் சிலைகள் வைக்கப்பட்டுவதாகவும், கோவை அவிநாசி சாலை சந்திப்பில் அனுமதி பெற்று வைக்கப்பட்டிருந்த அண்ணா சிலையின் பீடத்தை அகலப்படுத்தி முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது என, அவைகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று கோவையை சேர்ந்த லோகநாதன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இநத மனு விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீப் பேனர்ஜி,  நீதிபதி ஆதிகேசவலு அமர்வு தலைவர்களை பொறுத்தவரையில் அவர்கள் மரியாதைக்குரியவர்கள். அவர்களுக்கு எந்த அவமரியாதையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் அரசு நிலங்களை இதுபோன்று சிலைகள் அமைக்க பயன்படுத்த கூடாது என்று உத்தரவிட்டது.  மேலும் எதிர்காலத்தில் அனுமதியின்றி சிலைகள் வைப்பதை தடுக்கு வகையில் நடவடிக்கை எடுக்க அரசுக்கு நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

அனுமதியின்றி வைக்கப்படும் சிலைகளை அகற்றுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்திய நீதிபதிகள், அதற்காக தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன, இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அறிவிப்புகள் என்ன  இந்த விஷயத்தில் தமிழகஅரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்த அறிக்கையுடன்  தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் இந்த வழக்கின் விசாரணையை 6 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.